இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட டீசலை சகல பிரிவுகளுக்கும் விநியோகிக்க நடவடிக்கை..
Related Articles
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகையை கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய வளாகத்தில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துரிதமாக எண்ணெய் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிவந்த கப்பல் நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
தற்போது எண்ணெய் தொகை தரையிறக்கப்படும் நிலையில் துரிதமாக உரிய பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படுமென கனியவள கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பிரதி பொதுமுகாமையாளர் தெரிவித்தார். மின்சார சபையின் செயற்பாடுகளுக்கென டீசலின் ஒருதொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எவ்வாறெனினும் இன்றையதினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்டவரிசைகளை காண கிடைத்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.