போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சுற்றிவளைப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, எலபடவத்த பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 500 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே கிராண்ட்பாஸ் சிறிமுயுத்துயேன அடுக்குமாடி குடியிருப்புக்கு இடையில் 6 கிராம் 130 மில்லி கிராம் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதாகியுள்ளார். அங்குலான போதி ருக்பாராம வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.