ரஷ்யா – யுக்ரேன் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைக்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் , அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் வீடீயோ தொழில்நுட்ப கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போதே ரஷ்யா – யுக்ரேன் தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டது. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை சீனா கண்டிக்கவில்லையென அமெரிக்கா விமர்சித்துள்ளது. ரஷ்யாவுடனான நெருக்கம் காரணமாகவே சீனா மௌனம் காப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். உலக அமைதிக்காக அமெரிக்காவும், சீனாவும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். உலகம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. யுக்ரேன் யுத்தம் விரும்பத்தகாதது. எனினும் சீனா, ரஷ்யாவை கண்டிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யா – யுக்ரேன் யுத்தம் தொடர்பில் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் நேரடி பேச்சுவார்த்தை..
படிக்க 1 நிமிடங்கள்