உள்ளுராட்சிமன்றங்களில் செயற்படும் தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவை துறையை பலப்படுத்த நடவடிக்கை..
Related Articles
உள்ளுராட்சிமன்றங்களில் செயற்படும் தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவை துறையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது. திட்டத்திற்காக 2 ஆயிரத்து 979 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. இதன்போது 15 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டன. மேலும் 15 தீயணைப்பு வாகனங்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் ஜனக்கபண்டார தென்னக்கோன், இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.