வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு
Related Articles
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்க ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். எகிப்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பட்டிப்பொல ரயில் நிலையத்தில் அண்மித்த பகுதியில் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். அதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் நாட்டுக்கு வருகை தந்த 32 வயதான எகிப்து பிரஜை ஒருவர் ரயிலில் மிதிப்பலகையில் பயணித்த நிலையில் கீழே வீழ்ந்துள்ளார். காயமடைந்த நிலையில் அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.