இன்றைய தினம் 37 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது..
Related Articles
இன்றைய தினம் 37 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதென அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வருகை தந்துள்ள கப்பலிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான கடன் பினை பத்திரங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 30 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று இன்று அல்லது நாளைய தினம் வருகைத்தரவள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் சில நாட்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டை குறைக்க முடியுமென எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார்.