யுக்ரேனின் கிவ் நகரில் இன்றைய தினம் பாரிய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்தி வழங்குனர்களும், ஊடகவியலாளர்களும் அதுதொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மத்திய கிவ் பகுதியிலேயே குறித்த வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, அவை பாரியளவிலான வெடிப்பு சம்பவங்களாக காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேலையிலேயே பாரிய சத்தத்துடன் கூடிய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கிவ்விலுள்ள சுயாதீன ஊடக நிறுவனம் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை யுக்ரேனின் ஜனாதிபதி வொலாடிமீர் செலன்ஸ்கி ரஷ்ய எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேர செய்தி அறிக்கையின் போது நபர் ஒருவர் ரஷ்ய யுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். செய்தி அறிக்கையை பெண் செய்தி வாசிப்பாளர் வாசித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் கலையகத்துக்குள் யுத்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்ற வாசகத்துடன் உள்நுழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை ஜப்பான் 17 ரஷ்ய பிரஜைகளின் சொத்துக்களை முடக்கியுள்ளது. சொத்துக்கள் முடக்கப்பட்டவர்களில் கோடீஸ்வரர் விக்டர் வெக்செல்பேல்க் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு நம்பிக்கைக்குரியவரும் உள்ளடங்குவதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.