இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர நிறைவின் போது ஒரு விக்கட்டினை இழந்து, 28 ஓட்டங்களை பெற்றிருந்தது. இலங்கை அணி முதல் இனிங்ஸில் 109 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனிடையே இந்தியா அணி முதல் இனிங்ஸில் 252 ஓட்டங்களை பெற்ற நிலையில், இரண்டாவது இனிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்நிலையில் 4 19 ஓட்டங்களை பெற்றால் வெற்றி இலக்கு எனும் இலக்குடன் இலங்கை அணி இன்று களமிறங்குகிறது.