பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 18 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஆவார். அவர் பொகவந்தலாவ சென்மீரிஸ் பாடசாலையில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டியை பார்வையிட செல்வதாக கூறி சென்றுள்ளார். நேற்று மாலை வரை மாணவன் வீடு திரும்பாமையினால் பெற்றோர் அவரை தேடியுள்ளனர். கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்கு குறித்த மாணவன் வருகை தரவில்லை என அவரது நண்பர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் பயன்படுத்தப்படாத ஆழமான மரக்கறி தோட்டத்திலுள்ள கிணறொன்றிலிருந்து மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொகவந்தலாவ பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு..
படிக்க 1 நிமிடங்கள்