வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்த திருவிழா திருப்பலி, ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ் மறைமாவட்ட ஆயர், ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. நேற்று கொடியேற்றத்தையடுத்து சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. கொவிட் பரவல் நிலை காரணமாக திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை திருவிழாவில் வடமயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே. விமலநாதன், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர், நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்த திருவிழா..
படிக்க 0 நிமிடங்கள்