எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பாடசாலை மாணவர்களையும் வழமை போன்று பாடசாலைக்கு திரும்புமாறு கல்வி அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு புதிய சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.