fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2022 12:40

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஒத்துiழைப்பு வழங்கப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. இலங்கை வருகை தந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மத்சுகு அசகாவா நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறு மற்றும் நடுத்தர வர்த்தக அபிவிருத்தி மற்றும் தனியார் வர்த்தக துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் நிலைமை காரணமாக இலங்கையின் சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட பின்னடைவை சீர்செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா பாதிப்பின் தாக்கத்தை குறைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கியது. இதற்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதன் தலைவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2022 12:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க