யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். கிணற்றுக்கு குளிக்கச்சென்ற இளம் பெண் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரை காப்பாற்றச்சென்ற கணவனும், மின்சார தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நீர்தாங்கிக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயரில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்சாரம் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிணற்றுக்கு பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டாரிலிருந்தே மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்