கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி தர்மராஜா நித்தியாவிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்..
Related Articles
கொடுரமாக கொலை செய்யப்பட்ட மாணவி தர்மராஜா நித்தியாவிற்கு நிலையான நீதி கேட்டு ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாலிஎல நகரில் இப்போராட்டம் இடம்பெற்றது.
உடுவரை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயதான தர்மராஜா நித்யா எனும் பாடசாலை மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். பதுளை ஹாலிஎல தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 13 யில் கல்வி கற்கும் மாணவியான இவர் பாடசாலைக்கு சென்றுவரும் வழியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நிலையான நீதி கேட்டு பதுளை மாவட்ட ஆசிரியர் சேவையாளர் சங்கத்தினர் இன்று ஹாலியஎல நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.