ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா நாட்டுக்கு வருகை தந்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த நிலையில், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை தொடர்ச்சியாக வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இடர்களுக்கு மத்தியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் இலங்கை விஜயம் முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு விஜயம்..
படிக்க 0 நிமிடங்கள்