மத்தள விமான நிலையத்தின் ஊடாக முதன்முறையாக நிலையான நேரஅட்டவணைக்கு அமைய விமான பயணங்களை முன்னெடுப்பதற்கு விமான நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஷ் ஏயர் விமான சேவை நிறுவனமே அதற்கான இணக்கத்தை வழங்கியுள்ளது. அபுதாபியில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் முதலாம் திகதி விமானப்பயணம் இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் நிலையான நேரஅட்டவணையின் கீழ், குறித்த விமான நிறுவனம் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தருமென இராஜாங்க அமைச்சர் ஏ.ச்சானக்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாகவே குறித்த விமானம் வருகை தரவுள்ளது. கடந்தகாலங்களில் தற்காலிக சேவைகளாகவே மத்தள விமான நிலையத்திற்கான விமான சேவைகள் இடம்பெற்றதாகவும் இராஜாங்க அமைச்சர் னு.ஏ.ச்சானக்க மேலும் தெரிவித்துள்ளார்.