எரிவாயு நெருக்கடிக்கு எதிர்வரும் 2 தினங்களுக்குள் தீர்வு : லிட்ரோ நிறுவனம்
Related Articles
எரிவாயு நெருக்கடியை எதிர்வரும் 2 தினங்களுக்குள் தீர்க்கமுடியுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை கடல் வலயத்தை அண்மித்துள்ள 2 கப்பல்களில் 3 ஆயிரத்து 500 மற்றும் 3 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய 2 கப்பல்கள் காணப்படுவதாகவும் அவற்றுக்கு பணம் செலுத்தியவுடன், எரிவாயுவை உடனடியாக பெற்றுக்கொண்டு விநியோகிக்க முடியுமென லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு வணிக மற்றும் வீட்டு பாவனை, தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.