வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி திட்டமொன்றை வழங்க எதிர்பார்ப்பு
Related Articles
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டின் பணம் அனுப்பும் போது விசேட ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவுள்ளது. மத்திய வங்கியினால் அதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு அதிவிசேட ஊக்குவிப்பு தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார். ஒரு டொலருக்கு 20 ரூபா ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், ரூபாயின் பெறுமதியை பாதுகாப்பதற்கு பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 230 ரூபா வரை காணப்படும் என எதிர்பார்ப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்படலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்காக ஓய்வூதிய முறை மற்றும் காப்புறுதி திட்டமொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க முதலீட்டு வலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.