ஹம்பாந்தோடை மாவட்ட வைத்தியர்கள் பிரதமருடன் விசேட பேச்சுவார்த்தை..
Related Articles
ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைகள் தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கல்ல வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முறையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். அமைச்சர் ச்சமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்ட மஞ்சள் அறுவடையை கொள்வனவு செய்யும் வேலைத்திட்;டமும் பிரதமர் தலைமையில் தங்கல்ல பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒரு கிலோ கிராம் மஞ்சள் 165 ரூபா என்ற நிர்ணய விலையில் அரசாங்கம் கொள்வனவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.