வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு ஊக்குவிப்பு தொகை..
Related Articles
வெளிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக 10 ரூபாய் ஊக்குவிப்பு தொகையை 38 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கிலும், வெளிநாட்டு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூடுதலான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் அது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் காலாண்டில் 10 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை எட்டிய நிறுவனங்களுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கு 30 ரூபா ஊக்குவிப்பு தொகையை வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.