போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில் இரு பெண்கள் கைது..
Related Articles
விசேட அதிரடிப்படையில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்;ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊருகொடவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியிலேயே சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 10 கிராம் மற்றும் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட 15 ஆயிரத்து 180 ரூபா பணத்துடன் பெண் ஓருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் நீண்ட காலம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குடு செல்வி எனும் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளுக்கு மேலதிகமாக 32 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இரண்டு பெண் சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கிரான்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.