தங்க ஆபரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை களவாடிய சந்தேக நபர்கள் கைது..
Related Articles
தங்க ஆபரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை களவாடிய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்க ஆபரண கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் ராகம பெரலந்த பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, கம்பஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை களவாடி இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 9 முச்சக்கரவண்டிகளும், 2 மோட்டார் சைக்கிள்களும் அதன்போது பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.