இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19 ம் திகதிகளில் இலங்கை விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்றைய தினம் தமது கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை கச்சை தீவு திருவிழாவுக்கு இந்திய மீனவர்கள் வருகை தருவது குறித்தும் அமைச்சர் கருத்து வெளியிட்டார். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கருத்து வெளியிட்டார்.