கிளிநொச்சி கனகாம்பிகை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Related Articles
கிளிநொச்சி இரணைமடுக்குளம் கனகாம்பிகை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்று சிறியரக வேனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 29 வயதுடைய திறவையாறு முதலாம் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வேனில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனின் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.