தனது அமைச்சு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட முடியாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நேற்றையதினம் நீக்கப்பட்டனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே தான் அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரவை கூட்டங்களிலும் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தான் இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர் பதவிக்காக கிடைக்கப்பெறும் மாதாந்த சம்பளத்தை பெறாமல் இருப்பதற்கும் தான் தயாராகவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.