கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Related Articles
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்வியங்காடு வீதி ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.