எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருட்களை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல் மற்றும் மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்போக நெல் அறுவடை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள், அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகேயின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனைகருத்திற்கொண்டே தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எரிபொருட்களை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை..
படிக்க 0 நிமிடங்கள்