யுகதனவி உடன்படிக்கைக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு..
Related Articles
யுகதனவி உடன்படிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றிருந்த நிலையிலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டி யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை ஆட்சேபித்து 5 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குறித்த வழக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அளுவிகாரை, பிரியந்த ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்காதிருப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்ததாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த 5 மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.