இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை மொகாலியில் ஆரம்பமாகவுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்கவுள்ளார்.
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை குழாமில் நிஸங்க, லஹிரு திரிமான்ன, தனஞ்ஜயடி சில்வா, குசல் மெண்டிஸ், எஞ்சலோவ் மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால், சரித் அசலங்க, நிரோசன் திக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன, ரமேஸ் மென்டிஸ், லஹிரு குமார உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி சார்பாக ச்சட்டிஸ்வர் குஜாரா மற்றும் அஜன்கெஹா ரகானே நாளை ஆரம்பமாகவிருக்கும் நாளை ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்;டார்கள் என கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கொஹ்லி தனது 100 வது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாடவுள்ளமை விசேட அம்சமாகும். இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு போட்டி ஆரம்பமாகும். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தயாராகவுள்ளது.