இலங்கைக்கு எதிரான பெச்சலேயின் யோசனைகள் இன்று ஆணைக்குழு முன்னிலையில்.. ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு..
Related Articles
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமைகள்ஆணையாளர் மிச்சல்பெச்சலே இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த யோசனை இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
தற்போது வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர். இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்கள் நேற்றைய தினம் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மதேரிவ் தகவல் அளிக்கையில் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமைகள் பேரவையின் போது ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்துள்ளார். இலங்கை ரஷ்ய உறவுக்கு 65 வருடங்கள் பூர்த்தியாகுவதையொட்டி நேற்றுகொழும்பில்இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.