மீண்டும் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் பணிப்பகிஸ்கரிப்பில்..
Related Articles
17 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றையதினமும், நாளையதினமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன. எனினும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் பணிப்புறக்கணிப்புக்கு தமது ஆதரவை வழங்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு செயற்பட்டு வருவதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மருந்துகளை விநியோகித்தல், நோயாளர்களை சோதிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டு வைத்தியர்களிடம் அனுப்பி வைக்கும் செயற்பாடு எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.