கடந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளல் 16 வீதமானோர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேபோன்று உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 வீதமாகும். கடந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும். இதில் 31 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், உக்ரேன் – ‘பெலருஸ்’ மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவர்.
தொடர்ச்சியாக ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இது பெரும் பின்புலமாக அமைந்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய – உக்ரேன் நெருக்கடி நிலையினால் நாட்டிலுள்ள உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் பெந்தோட்டை பிரதேசத்திலுள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். இதனால் யுத்தம் சமரசம் செய்யப்படும் வரை தமக்கு இலங்கையில் இருப்பதற்கு அனுமதி தருமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.