சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் ஹசித லியனாராச்சி தெரிவித்துள்ளார். 50 சிறுவர்கள் ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுகின்றனர். கடந்த இரு வாரங்களுக்குள் கொவிட் தாக்கத்தினால் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக டொக்டர் ஹசித லியனாராச்சி தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான சிறுவர்களுக்கு கொவிட் தொற்றினால் ஆபத்துக்கள் இல்லை. எனினும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தொற்று மரணத்தை ஏற்படுத்தும் அபாயமிக்கதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில்லை. இதனால் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்களால் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிப்பதற்கான போதிய பக்குவம் இல்லை. இதனால் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட வேண்டுமென கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் ஹசித லியனாராச்சி தெரிவித்துள்ளார்.