நாட்டில் நேற்றையதினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக ஆயிரத்து 281 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த எண்ணிக்கையுடன் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 40 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் பின்னர் 6 இலட்சத்து 7 ஆயிரத்து 583 பேர் வரை தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரத்தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றையதினத்தில் கொவிட் – 19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட 31 மரணங்கள் தொடர்பான உறுதிப்படுத்தல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.