541 மெகாவோட் மின்சார இழப்பு தேசிய மின்கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 3 கட்டங்களாக இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதோடு, ஒருசில பிரிவுகளில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனல் மின்நிலையங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு நீர்மின் உற்பத்திக்காக நீரை பெற்றுக்கொள்ளும் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைதல் உள்ளிட்ட காரணங்களினால் மின்விநியோகத்தை தொடரச்சியாக முன்னெடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் பகல் வேளையில் 2 ஆயிரத்து 150 மெகாவோட் மின்சார கேள்வி காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இரவு வேளையில் 2 ஆயிரத்து 700 மெகாவோட் வரை அதிகரிக்குமென இலங்கை மின்சார சபையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையிலேயே நாடு; முழுவதும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் A.B.C என மூன்று பிரிவுகளில் 2 மணித்தியால மின்வெட்டும், ஏனைய பிரிவுகளான P.Q.R.S மற்றும் T .U. V. X ஆகிய பிரிவுகளில் 3 மணித்தியால நீரவெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இன்றைய தினமும் மின்வெட்டு..
படிக்க 1 நிமிடங்கள்