fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர்கள் மத்தியில் மிஸ்ஸி எனப்படும் நோய் பரவல் குறித்து சுகாதார தரப்பினர் அவதானம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2022 15:01

சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, 14 தினங்களுக்கு பின்னர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். கொவிட், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றுக்கு சமமான நோய் அறிகுறிகளே காணப்படுவதாக ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

கண்கள் மற்றும் முகம் சிவத்தல், வாந்திபேதி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், குழந்தைகளை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். மிஸ்ஸி எனப்படும் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவான குழந்தைகளே குறித்த நோய் தாக்கும். மிஸ்ஸி நோய்க்கு முன்கூட்டியே சிகிச்சை பெறவேண்டுமென டொக்டர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2022 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க