நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்கும் வரை விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் தேசிய சேவை சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்திருந்தார். அவரது கூற்று அடிப்படையற்றதென அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்திருந்தார். நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வதந்திகள் பரவின. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. குறித்த நிலையங்களில் எரிபொருள் பதுக்கல் செய்யப்பட்டது. எரிபொருள் கையிருப்பில் இருந்த போதிலும் தீர்ந்து விட்டதாக சில எரிபொருள் நிலையங்கள் பொய்யான தகவல்களை வழங்கின. குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படுமென அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க மறுத்தால் உடனடியாக பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு அறிவிக்குமாறும் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்கிறார் எரிசக்தி அமைச்சர்..
படிக்க 1 நிமிடங்கள்