நாட்டில் நேற்றையதினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக ஆயிரத்து 217 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த எண்ணிக்கையுடன் இதுவரை நாட்டில் மொத்தமாக பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 31 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் பின்னர் அவர்களில் 5 இலட்சத்து 96 ஆயிரத்து 42 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் மேலும் 25 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 25 மரணங்களுடன் நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 899ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.