பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் ஏற்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கண்டறியப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியிலிருந்து நாட்டில் நாளாந்தம் 450 பேர் வரை மாரடைப்பினாலும், 100 தொடக்கம் 150 பேர் பக்கவாதத்தினாலும் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியினால் இவ்வாறான நிலை ஏற்படுவதாக குறிப்பிடுவது எவ்வித அடிப்படையும் அற்றதென விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் அடிப்படையற்ற போலி பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்