பெல்மடுல்ல பட்டலந்த பகுதியில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
வயல் வெளியில் இவ்விரு நபர்களும் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய வயல் வெளியில் காயமடைந்த நிலையில் விழுந்திருந்த இவ்விருவரும் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அவர்கள் உயிரிழந்ததாகவே அறிவிக்கப்பட்டது.
28 மற்றும் 38 வயதுடைய பட்டலந்த பெல்மடுல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.