உஹன பண்டரதுவ கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களுகல் ஓய நீர்த்தேக்கம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ச்சமல் ராஜபக்ஷவின் கரங்கலால் மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்ட குறித்த நீர்த்தேக்கம் நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொறியியலாளர்களின் தொழில்நுட்பத்தை கொண்டு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் களுகல் ஓயா நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இதன் ஊடாக நீரை விநியோகிக்க முடியும்.
நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் பண்டரதுவ மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். களுகல் ஓய நீர்த்தேக்க நன்னீர் மீன்பிடி தொழிற்துறையை கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டு மீன்குஞ்சுகளை விடுவிக்கும் பணியும் இதற்கிணைவாக இடம்பெற்றது.
இதனை சூழ வீதிக்கட்டமைப்பு காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான விமலவீர திசாநாயக்க, சிறிபால கம்லத், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஹால் சிறிவர்த்தன ஆகியோர் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டர்.