உள்ளூர் தொழிற்சாலை உற்பத்திகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நாளை (03) முதல் விசேட வர்த்தக கண்காட்சிகளை நடத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்தப்படவுள்ள இந்த கண்காட்சி கைத்தெழில் 2022 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் இது தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.