பெலியகொட மெனிங் சந்தைக்கு வருகை தரும் வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கென இன்று முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
பெஹலியகொட மெனிங்க சந்தை பஸ் தரிப்பிடத்துக்கு வருகை தந்த ராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவ குறித்த பஸ் சேவையை ஆரம்பித்துவைத்தார்.
ஆரம்பத்தில் இங்கு மொத்த வர்த்தக நடவடிக்கைகளே இடம்பெற்றன. இங்கு சில்லறை வர்த்தகத்தை ஊக்குவிக்கும் தேவை காணப்படுகின்றது. மெனிங் சந்தைக்கு முன்னால் உள்ளவீதியில் பொது போக்குவரத்துக்கள் இடம்பெறாமை இதற்கு தடையாக காணப்படுகின்றது. மேல் மாகாண சபை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடனும் இணைந்து ஆளுநருடனும் கலந்துரையாடி முதற்கட்டமாக இன்று காலையிலும் மாலையிலும் சேவையில் ஈடுபடகூடிய பஸ்சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வெலிவேரிய , கம்பஹா , கடவத்தை , நிட்டம்புவ , ஹெதல , நீர்கொழும்பு , ரத்தொலுகம , கொழும்பு மற்றும் புறக்கோட்டையில் இருந்து குறித்த பஸ்சேவையினூடாக பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் குறித்த சேவையை நாள் முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.