கிராமத்துடன் கலந்துரையாடல் மற்றும் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு இலட்சம் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட குறித்த வேலைதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக வரியை அறவிடக்கூடிய வருமானமீட்டும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் நூற்றுக்கு 25 வீத கூடுதல் வரி அறவிடுவது தொடர்பான சட்ட வரைபை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.