சீமெந்து பற்றாக்குறை மாபியா ஆகும் : நிர்மாணத்துறை சங்கம் அம்பலம்
Related Articles
ஒருசில குழுக்களின் மாபியா செயற்பாடுகளே சீமெந்து பற்றாக்குறைக்கு காரணமென நிர்மாணிப்புத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடாத்திய அவர், விலை கட்டுப்பாட்டு அதிகார சபையினால் சீமெந்து விலையை கட்டுப்படுத்தாமையும் விலை அதிகரிப்புக்கு காரணமென மேலும் தெரிவித்துள்ளார்.
“உள்ளுர் கைத்தொழில் உற்பத்தி 30 சதவீதமாகும். இலங்கையில் 2 கம்பனிகள் இறக்குமதியாளர்களாக உள்ளனர். ஒரு கம்பனி 32 சதவீதமானவற்றை இறக்குமதி செய்கின்றது. மற்றைய கம்பனி 18 சதவீதத்தை இறக்குமதி செய்கின்றது. நேற்றுமுன்தினம் அளவில் 22 ஆயிரம் மெற்றிக்தொன் சீமெந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்பட்டுள்ள மாபியாவினால் அத்தியாவசிய பொருளாக காணப்படுகின்ற சீமெந்தில் விலை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைத்திருக்க முடியாது. இது விலை நிர்ணய அதிகார சபைக்குள்ள சட்டரீதியான செயற்பாடு ஆகும். பொதுமக்களின் பயன்பாட்டுக்கென இவற்றை சந்தைக்கு விடவேண்டும். இச்செயற்பாடு இடம்பெறுகின்றதா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்தளவு சீமெந்து இறக்குமதி செய்யப்படுவதாயின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன ? “