இலங்கைக்கு மூன்று நில அதிர்வு தொடர்பான மத்திய நிலையங்களை இலவசமாக வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.இதன் மூலம் இலங்கையில் நில அதிர்வு தொடர்பான நிலையங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
பல்லேகல, புத்தங்கல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் நில அதிர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவினால் உறுதியளிக்கப்பட்ட மூன்று பூகம்ப மையங்கள் மேற்கு மற்றும் வடமேல் மாகாண எல்லையில் அமைக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் நில அதிர்வுகள் மற்றும் நிலநடுக்க விழிப்புணர்வு குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. நில அதிர்வு ஆய்வுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.