கூடுதல் விலைக்கு சீமெந்து பொதிகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு சீமெந்து பொதிகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
சீமெந்து பொதிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பதுக்கிவைத்திருக்கும் செயற்பாடும் தண்டனைக்குரிய குற்றமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சீமெந்து பொதிகளை பதுக்கி வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.