கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பிரதேச சபையின் தீயணைப்பு படையினர் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்றிரவு 11.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக செயற்பட்ட தீயணைப்பு படை பிரிவினரும், இராணுவத்தினரும் தீ ஏனைய பகுதிகளுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அவர் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.