fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய கொள்ளளவைக் கொண்ட எண்ணெய் தாங்கி மற்றும் ஆயுத பாதுகாப்பு கட்டமைப்பு..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2022 13:15

புதிய கொள்ளளவைக் கொண்ட எண்ணெய் தாங்கி மற்றும் ஆயுத பாதுகாப்பு கட்டமைப்பு என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்ப்பட்ட சந்தர்ப்பம் நாட்டின் கடற்படைத் துறையில் கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எண்ணெய் வங்கி முனையத்தில் புதிய கொள்ளளவைக் கொண்ட எண்ணெய் தாங்கியும் ஆயுத பாதுகாப்பு கட்டமைப்பும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலவிய களஞ்சிய நெருக்கடிக்கு இதனூடாக தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. 3 ஆயிரத்த 200 மெட்ரிக் தொன் எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில் புதிய தாங்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆயுத பாதுகாப்பு கட்டமைப்பானது 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதேவேளை இலங்கை சுங்க திணைக்களத்தின் கொள்கலன் கொண்டு செல்லும் செயன்முறையை கண்காணிக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப கட்டமைப்பு உத்தியோகப்பூர்வமாக சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்பெறுமதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

துறைமுகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கொள்கலன் கட்டமைப்பு வேலைதிட்டத்தின் ஊடாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சேவையை பெற்றுக்கொடுக்க முடியுமென சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சுங்க திணைக்களத்தினால் நாளாந்தம் சுமார் ஆயிரத்து 100 கொள்கலன்கள் இறக்குமதியின் போதும், 400 கொள்கலன்கள் ஏற்றுமதியின் போதும் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2022 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க