எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று விமான சேவை முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
தென் இந்தியா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்காக இவ்வாறு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பிராந்திய சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு 2 விமான நிறுவனங்கள் தற்பொழுது விருப்பம் தெரிவித்துள்ளன.